Thursday, September 25, 2014

Private IP Adress , Public IP address - வேறுபாடு என்ன?

Private IP Address , Public IP address இரண்டுக்கும் வேறுபாடு என்ன?


Private IP Address என்பது நமது  கணினிக்கு நாமே கொடுக்கும் ஒரு அடையாள எண் ஆகும்.

உங்களது கணினியின் Private IP Address   என்ன என்பதை அறிய Command Mode- ல் சென்று ipconfig  என Type செய்து  Enter கொடுத்தால் உங்களது கணினியின்  Private IP Address  தெரிந்து கொள்ளலாம்.



Public IP Address என்பது நமது கணினியானது  இணையத்தொடர்பில் உள்ளபோது, நமக்கு இணையத்தொடர்பு வழங்கிய நிறுவனத்தால் (Internet Service Provider - ISP)  கொடுக்கப்படும் ஒரு தற்காலிக  அடையாள எண் ஆகும்.

நமது கணினிக்கு வழங்கப்படும் Public IP Address என்ன என்பதை நாம் சில இணையதளங்களை பயன்படுத்தி மட்டுமே அறிய முடியும்.


என்ற இணையதளம் நமது கணினியின்  Public IP Address  -ஐ  தெரியப்படுத்தும். 




ஒரு அலுவலகத்தில்  Local Area Network (LAN) - ல் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு தனி Private IP Address நம்மால் தரப்பட்டிருக்கும்.

ஆனால்....

அந்த அனைத்துக் கணினிகளிலும்  Public IP Address என்னவென்று பார்த்தால் ஒரே   எண்ணாக இருக்கும்.

ஏன் தெரியுமா?...

அதாவது ஒரு அலுவலகத்திற்கு வழங்கப்படும் Internet Connection ஆனது முதலில் ஒரு Router ல் இணைக்கப்படும். அந்த Router லிருந்து பெறப்படும் இணைய சேவையைத்தான் நாம் Local Area Network (LAN) மூலமாக அனைத்துக் கணினிகளுக்கும்  Share செய்கிறோம்.

Internet Service Provider (ISP) ஆல் நமது இணைய இணைப்பிற்கு கொடுக்கப்படும் Public IP Address ஆனது மேற்கண்ட Router க்கு கொடுக்கப்படும்  ஓர் அடையாள எண் ஆகும்.

அதனாலேயே Router-  ஐ  LAN -ல்  Connect செய்து Internet -Share செய்யும் பொழுது  LAN -ல் உள்ள அனைத்துக் கணினிகளிலும் ஒரே  Public IP Address காண்பிக்கிறது.

ஒவ்வொரு முறை நாம் Router - ஐ  Switch off செய்து விட்டு மீண்டும் Switch on செய்து  இணையத்துடன்  இணையும் பொழுதும் சுழற்சி முறையில் வேறுவேறு Public IP Address நமது Router க்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வகை சுழற்சி முறையில் வழங்கப்படும்  IP Address - களுக்கு Dynamic Public IP Address என்று பெயர்.

ஒரு வேளை நமது இணைய இணைப்பிற்கு நிரந்தர அடையாள எண்  அதாவது  Static Public IP Address  வேண்டுமானால் நாம் ISP- யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு தனியாக ஒரு தொகையை ISP  நிறுவனம் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.

Static Public IP Address -எதற்கு தேவைப்படும் என்பதை நாம் மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

...................................................




No comments:

Post a Comment