Thursday, September 25, 2014

ஓர் இணையதளம் எந்த IP முகவரியிலிருந்து இயங்குகிறது?



ஓர் இணையதளம் எந்த IP  முகவரியிலிருந்து (IP Address) இயங்குகிறது  என தெரிந்து கொள்ள வேண்டுமா?

Command Mode சென்று  ping என டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, IP  Address தெரிந்து கொள்ள வேண்டிய இணையதளத்தின் முழுப்பெயரை (Domain Name) டைப் செய்து Enter கொடுக்கவும்.

உதாரணமாக,

ping    www.google.com


என டைப் செய்து Enter கொடுத்தால் google.com  ன்  IP முகவரியை (IP Address) நாம் அறிந்து கொள்ள முடியும்!






ஒரு இணையதளத்தின் IP Address ஆனது அந்த இணையதளம்  Hosting செய்யப்பட்டிருக்கும் Web Server - ன் Public IP Address ஆகும்.

 ( Pubic IP Address என்றால் என்ன என்பதை அறிய முந்தைய பதிவினை  படிக்கவும்.)

google போன்ற பிரபலமான இணையதளங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட Web Server - களிலிருந்து இயங்குகின்றன.

 அது போன்ற இணையதளங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட  IP Addresses - உண்டு.

எனவே ஒரு இணையதளத்தின் அனைத்து IP Address - களும் தெரிந்து கொள்ள:

Command Mode - சென்று,

nslookup


 என டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு   இணையதளத்தின் பெயரை (Domain Name) கொடுத்து என்டர் செய்தால் அந்த இணையதளம் இயங்கும் அனைத்து Webserver -களின் IP Address - களும் பார்க்க முடியும்.

உதாரணமாக:

nslookup    google.com

அல்லது

nslookup www.google.com





ஓர் இணையதளத்தின்  IP முகவரியை நாம் நேரடியாக பிரவுசரின் 
Address Bar - ல் Type செய்தாலும் அந்த முகவரிக்குரிய இணையதளம்  Connect ஆகும்.


உதாரணமாக Browser ல்  www.google.com ன் IP முகவரிகளில் ஒன்றான 74.125.236.209 -ஐ நாம் நேரடியாக டைப் செய்து Enter கொடுத்தால் www.google.com  இணையதளம் Open ஆகும்.





  



ஆனால் எல்லா இணையதளங்களையும் நாம்  மேற்கண்டவாறு IP முகவரி கொடுத்து  Connect செய்ய முடியாது.

ஏன்?

 அதனை வேறு ஒரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

....

Private IP Adress , Public IP address - வேறுபாடு என்ன?

Private IP Address , Public IP address இரண்டுக்கும் வேறுபாடு என்ன?


Private IP Address என்பது நமது  கணினிக்கு நாமே கொடுக்கும் ஒரு அடையாள எண் ஆகும்.

உங்களது கணினியின் Private IP Address   என்ன என்பதை அறிய Command Mode- ல் சென்று ipconfig  என Type செய்து  Enter கொடுத்தால் உங்களது கணினியின்  Private IP Address  தெரிந்து கொள்ளலாம்.



Public IP Address என்பது நமது கணினியானது  இணையத்தொடர்பில் உள்ளபோது, நமக்கு இணையத்தொடர்பு வழங்கிய நிறுவனத்தால் (Internet Service Provider - ISP)  கொடுக்கப்படும் ஒரு தற்காலிக  அடையாள எண் ஆகும்.

நமது கணினிக்கு வழங்கப்படும் Public IP Address என்ன என்பதை நாம் சில இணையதளங்களை பயன்படுத்தி மட்டுமே அறிய முடியும்.


என்ற இணையதளம் நமது கணினியின்  Public IP Address  -ஐ  தெரியப்படுத்தும். 




ஒரு அலுவலகத்தில்  Local Area Network (LAN) - ல் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு தனி Private IP Address நம்மால் தரப்பட்டிருக்கும்.

ஆனால்....

அந்த அனைத்துக் கணினிகளிலும்  Public IP Address என்னவென்று பார்த்தால் ஒரே   எண்ணாக இருக்கும்.

ஏன் தெரியுமா?...

அதாவது ஒரு அலுவலகத்திற்கு வழங்கப்படும் Internet Connection ஆனது முதலில் ஒரு Router ல் இணைக்கப்படும். அந்த Router லிருந்து பெறப்படும் இணைய சேவையைத்தான் நாம் Local Area Network (LAN) மூலமாக அனைத்துக் கணினிகளுக்கும்  Share செய்கிறோம்.

Internet Service Provider (ISP) ஆல் நமது இணைய இணைப்பிற்கு கொடுக்கப்படும் Public IP Address ஆனது மேற்கண்ட Router க்கு கொடுக்கப்படும்  ஓர் அடையாள எண் ஆகும்.

அதனாலேயே Router-  ஐ  LAN -ல்  Connect செய்து Internet -Share செய்யும் பொழுது  LAN -ல் உள்ள அனைத்துக் கணினிகளிலும் ஒரே  Public IP Address காண்பிக்கிறது.

ஒவ்வொரு முறை நாம் Router - ஐ  Switch off செய்து விட்டு மீண்டும் Switch on செய்து  இணையத்துடன்  இணையும் பொழுதும் சுழற்சி முறையில் வேறுவேறு Public IP Address நமது Router க்கு அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வகை சுழற்சி முறையில் வழங்கப்படும்  IP Address - களுக்கு Dynamic Public IP Address என்று பெயர்.

ஒரு வேளை நமது இணைய இணைப்பிற்கு நிரந்தர அடையாள எண்  அதாவது  Static Public IP Address  வேண்டுமானால் நாம் ISP- யிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு தனியாக ஒரு தொகையை ISP  நிறுவனம் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும்.

Static Public IP Address -எதற்கு தேவைப்படும் என்பதை நாம் மற்றொரு பதிவில் பார்க்கலாம்.

...................................................




Monday, September 22, 2014

" Low Disk Space" பிழைச் செய்தி: ஏன்? என்ன செய்ய வேண்டும்?

Hard Disk- ல் ஒரு Partition -ல் மிகவும்  குறைவான  Free Space இருந்தால் மேற்கண்ட பிழைச்செய்தி வரும்.

அதை சரி செய்வது எப்படி?

உதாரணமாக ,   C,D,E என மூன்று  Partitions உள்ள ஒரு  Hard Disk - ல்  C:  Partition - ல் பிழைச்செய்தி  வந்தால்  மற்ற   D,E  Partition - களில் உள்ள  Free  Space  எடுத்து  C: Partition  உடன் இணைத்து C: Partition  - ன்  Free Space அதிகப்படுத்துவதன் மூலம் மேற்கண்ட பிழைச்செய்தி வராமல் தடுக்க முடியும்.

இதற்கு EaseUs Partition Master எனும் மென்பொருளை நாம் http://www.easeus.com/download/epmf-download.html   - லிருந்து  Download செய்து நமது Computer -ல் செய்ய Install செய்ய வேண்டும்.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி D: மற்றும் E: Partition -  களிலுள்ள Free Space -ஐ எடுதது C: Partition -  உடன் இணைப்பதன் மூலம் மேற்கண்ட பிழைச்செய்தி வராமல் சரி செய்யலாம்.


"Low Disk Space" error message is: Why? What to do?

At a Partition Free Space on Hard Disk- much less if the above error message.

How can I fix it?

For example,   C, D, E as the three Partitions a Hard Disk - in,  C:  Partition - in the error message if the other   D, E  Partition - of the Free Space to take the   C:  Partition in conjunction with the C: Partition -'s Free Space by increasing the above-mentioned error message can prevent.

The EaseUs Partition Master is a software we httpwwweaseuscomdownloadepmf-DOWNLOAD.html   - Download from the Computer back to our need to Install.