Friday, September 18, 2015

How to install IIS Web server ? - உங்கள் கணினியில் IIS Web Server நிறுவுவது எப்படி?


உங்கள் கணினியில் Microsoft -  நிறுவனத்தின் IIS Web Server  நிறுவ வேண்டுமா?


ஒரு சில முக்கியமான Application - கள்  Windows Operating System -ல் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும். 

அவற்றை நாம் தனியாக Install  செய்ய வேண்டியதில்லை. 

தேவைப்படும்போது அவற்றை Enable  செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையற்றபோது அவற்றை  Disable செய்து வைக்கலாம்.

IIS Web Server - ம் அது போன்று Windows Operating System - ல் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு Application  ஆகும்.


நாம் அந்த Application - னை  Enable செய்தால் போதும். 

எப்படி?....

1.முதலில்  Control Panel செல்லவும்.



2.  Programs -என்பதனை Click  செய்யவும்.



3. Programs and Features - என்ற தலைப்பின் கீழ் உள்ள Turn Windows futures on or off - என்பதனை Click செய்யவும்.


4. பின்னர் வரும் Dialog Box - ல் என்ற Internet Information Services - தலைப்பினை Expand - செய்து கீழ்க்கண்ட படங்களில் உள்ளவாறு தேவையான Service - களை  Select செய்யவும்.









5.கடைசியாக Ok  Button -ஐ Click செய்யவும்.



இப்போது உங்கள் கணினியில் IIS Web Server ஆனது பயன்பாட்டிற்கு வரும்.

உங்கள் கணினியில் IIS Web Server - ஆனது நிறுவப்பட்டுள்ளதா என்பதனை தெரிந்து கொள்ள....

1. c:\  - ல்  inetpub என்ற Folder  உருவாகியிருக்கும்.

2. Browser ல் http://localhost என டைப் செய்து Enter கொடுத்தால் கீழ்க்கண்ட படம் திரையில் வரும்.





இப்போது உங்கள் கணினியில் IIS Web Server - நிறுவப்பட்டதை உறுதி செய்து விட்டீர்கள்.


 IIS Web Server - பயன்படுத்துவது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


(குறிப்பு: மேற்கண்ட அனைத்து செய்முறைகளும் Microsoft - ன் Windows 7 க்கான வழிமுறைகளாகும். 

Windows XP- ல் Install செய்யும்போது    XP  CD - ஐ CD Drive- வில் போட்டு வைத்து விட்டு மேற்கண்ட செய்முறைகளை செய்யவேண்டும்.)

.....


No comments:

Post a Comment