Monday, September 21, 2015

what is WEB HOSTING? - WEB HOSTING என்றால் என்ன?




ஒரு இணையதளம் அல்லது ஒரேயொரு இணையப்பக்கம் நாம் உருவாக்கி விட்டதாக வைத்துக்கொள்வோம்.

அதனை இணையம் அதாவது Internet மூலமாக உலகம் முழுவதும் பார்வையிடும்படி செய்வது  WEB HOSTING எனப்படும்.

WEB HOSTING செய்வதற்கு தேவையானவை என்ன?...


1.  ஓர் இணையதளம் அல்லது இணையப்பக்கம் (A Web Site or  Web Page)

2. ஒரு வெப் செர்வர் (Web Server - for Example : IIS Web Server).

3.  இணைய வசதி.- (High Speed Internet Connection)



   இணைய வசதி கொண்ட ஒரு கணினியில் WEB SERVER - எனும் ஒரு Application - ஐ Install செய்து, அந்த Web Server - ல் ஒரு இணையதளத்தை இணைத்துவிட்டால் அதாவது Web Hosting செய்து விட்டால் அந்த இணையதளத்தினை உலகில் இணைய வசதிகொண்ட அனைத்து கணினிகளில் இருந்தும் பார்வையிட முடியும்.

இப்போது ஒரு இணையப்பக்கத்தை Web Hosing செய்வது எப்படி என பார்ப்போம்.

அதற்கு முன்....

1.

2. 

3.

 உங்கள் கணினியில் IIS Web Server நிறுவுவது எப்படி?



ஆகிய மூன்று பதிவுகளையும் படித்துவிட்டு மேற்கொண்டு தொடரவும்.

நாம் ஏற்கனவே mysite.html எனும் ஒரு இணையப்பக்கத்தினை தயார் செய்து விட்டோம். 

நாம் ஏற்கனவே IIS - வெப் செர்வரை நமது கணினியில் நிறுவி விட்டோம்.

அந்த mysite.html இணையப்பக்கமானது தற்போது நமது கணினியில் மட்டுமே பார்வையிட முடியும். 

அந்த mysite.html எனும் இணையப்பக்கத்தினை IIS Web Server - ஐப் பயன்படுத்தி எப்படி  Web Hosting செய்வது,  அதாவது உலகம் முழுவதும் பார்வையிடச் செய்வது எப்படி எனப் பார்ப்போம்.

1.   C:\ சென்று inetpub எனும் Folder-  ஐ  Open செய்யவும்.

2.  அதில் உள்ள wwwroot எனும் Sub Folder - ஐ  Open செய்யவும்.

3.   நமது கணினியின் Desktop பகுதியில் ஏற்கனவே நாம் உருவாக்கிய mysite.html      எனும் இணையப்பக்கத்தினை Copy  செய்து இந்த  wwwroot எனும் Folder- க்குள்       Paste செய்யவும்.



4. Start -> Search Programs (or) Run  சென்று inetmgr என்று  Type செய்யவும்.
      




5.  இப்போது IIS Web Server ஆனது Open ஆகும்.


6. உங்கள் கணினியின் பெயரில் தெரியும் Local Host -ஐ Righ Click செய்து , Start என்பதனை Click  செய்யவும்.இப்போது உங்கள் IIS Webserver -ஆனது முறைப்படி இயங்கத் தொடங்கும்.

(இங்கு குறிப்பிடப்படும் Localhost என்பது உங்கள் கணினியின் பெயரில் இருக்கும்.)



7. பின்னர்  Local Host-ஐ  Expand செய்து அதில் வரும் Default Web Site என்பதனை Right Click செய்து Swich to Content View - என்பதனை Click  செய்யவும்.


8. இப்போது வலது புறத்திலுள்ள Default Web Content எனும் பகுதியின் கீழ் உங்களது mysite.html எனும்  இணையப்பக்கமும் இணைந்திருப்பதைக் காணலாம்.



9.  ஒருவேளை உங்கள் mysite.html எனும் இணையப்பக்கமானது IIS Web Server - ல் மேற்கண்டவாறு காணப்படவில்லை எனில்  Default Web Site --ஐ Right Click  செய்து Manage Web Site  சென்று Restart என்பதனை Click செய்யவும்.


10. இப்போது உங்கள் mysite.html எனும் இணையப்பக்கமானது Hosting  செய்யப்பட்டு விட்டது. 

இப்போது ஏதாவது ஒரு Browser  -ஐ Open செய்து  Address Bar -ல் 

http://localhost/mysite.html  

அல்லது 

http://127.0.0.1/mysite.html

என டைப் செய்து Enter கொடுத்தால் உங்கள் mysite.html  இணையப்பக்கமானது IIS Web Server  - ல் முறைப்படி Hosting  செய்யப்பட்டுள்ளதை கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு தெரிவதை வைத்து அறிந்து கொள்ளலாம்.





127.0.0.1 என்ற  IP Address -ஆனது ஒரு கணினியின் Loop Back Address - என அழைக்கப்படுகிறது. 

அதாவது ஒரு கணினியிலிள்ள ஒரு HTTP செர்வருக்கு அதே கணினியிலுள்ள ஒரு HTTP Client ஆனது Request அனுப்பி Response  பெறுவதற்கு பயன்படும் ஒரு IP Address ஆகும்.

இந்த IP Address - ஆனது எல்லா கணினிகளுக்கும் பொதுவாக பயன்படுத்தப்படும் Loop Back IP Address ஆகும்.

சரி இப்போது நாம் ஒரு இணையப்பக்கத்தினை ஒரு கணினியில் Hosting செய்து அதே கணினியில் சோதித்துப் பார்த்து விட்டோம்.

 கணினியானது LAN - ல் இணைக்கப்பட்டிருக்கிறதா?

எனில், உங்கள் இணையப்பக்கத்தினை அந்த LAN -ல் இணைக்கப்பட்டுள்ள வேறொரு கணினியில் பார்வையிடுவோம். 

எப்படி?...

LAN - ல் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு பிரத்தியேக Private  IP Address - ஆனது கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் கணினியின் Private IP Address தெரிந்து கொள்ள Command Mode -சென்று ipconfig என டைப் செய்தால் உங்கள் கணினியின் Private IP Address தெரிந்து கொள்ளலாம்.





உதாரணமாக உங்கள் கணினியின் IPv4 Address ஆனது மேற்கண்ட படத்தில் உள்ளதுபோல் 192.168.1.135 என வைத்துக்கொள்வோம்.

இப்போது உங்கள் கணினி இணைந்துள்ள LAN Network - ல் உள்ள வேறு ஒரு கணினியில் Browser - ஐ Open  செய்து Address bar -ல் http://192.168.1.135/mysite.html  என டைப் செய்து Enter கொடுத்தால் உங்கள் இணையப்பக்கத்தினை அந்த கணினியில் பார்வையிட முடியும்.


Hosting செய்யப்பட்ட உங்கள் இணையப்பக்கத்தினை அதே கணினியிலும் பின்னர் LAN - ல் இணைந்துள்ள மற்றொரு கணினியிலும் பார்வையிட்டு விட்டோம். 

இப்போது உங்கள் இணையப்பக்கத்தினை உலகில் உள்ள மற்ற அனைத்துக் கணினிகளிலும் எப்படி பார்வையிடச் செய்வது என்பதனை அடுத்த பதிவில் பார்ப்போம்.


....




No comments:

Post a Comment