Thursday, September 3, 2015

What is Web Server?- வெப் செர்வர் என்றால் என்ன?



வெப் செர்வர் என்பது  ஒரு Application அல்லது ஒரு Software  ஆகும். 

( ஆனால் சில சமயங்களில் வெப்செர்வர் Application பயன்படுத்தப்படும் கணினிகளும் வெப்செர்வர் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.)

இணையம் அதாவது  INTERNET ஆனது   , Client- Server முறையில் செயல்படுகிறது. 

இணையத் தொழில்நுட்பத்தில்...

வெப் செர்வர் என்பது SERVER எனில் CLIENT என்பது எது ?

அதுதான்  Browser ஆகும்.

உதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் Internet Explorer, firefox, Google Chrome போன்ற அனைத்து Browser -  களும்  Client softwares - ஆகும்.

Client -கள் கேட்கும் தகவலை கொடுக்க வேண்டியது ஒரு Server - ன் பணி.

CLIENT தகவல் கேட்கும் செயல் - REQUEST எனப்படும்.

SERVER தகவல் கொடுக்கும் செயல் - RESPONSE  எனப்படும்.






ஒவ்வொரு வெப் செர்வரும் ஒரு - Default Folder ஐ க் கொண்டிருக்கும். 

அந்த Folder - க்குள் நமது இணைய பக்கங்களை சேமித்து வைக்க வேண்டும்.



அப்படி வைக்கும் போது நமது இணையப்பக்கங்களானது உலகில் மற்றவர்களால் பார்வையிட முடியும்.

Default Folder அல்லாமல் வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இணையப்பக்கங்களையும் Virtual Directory  என்ற முறையில் பயன்படுத்தலாம்.

உலகில் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வெப்செர்வர் Software களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள...


என்ற பதிவினை படிக்கவும்.


நாம் ஏற்கனவே சென்ற பதிவில் mysite.html என்ற பெயரில் உருவாக்கிய ஒரேயொரு இணையப்பக்கத்தை ஒரு வெப் செர்வர் மூலமாக எப்படி உலகத்திலுள்ள மற்றவர்களை பார்வையிட செய்வது என்பது பற்றி முதலில் பார்ப்போம்.

நாம் முதலில் எந்த வெப் செர்வரை பயன்படுத்துவது என்று முடிவு செய்ய வேண்டும்.

MicroSoft -நிறுவனத்தின் IIS -Internet Information Services எனும் வெப் செர்வரை பயன் படுத்துவது பற்றி பார்ப்போம்.....


......

No comments:

Post a Comment